Monday, June 11, 2012

வேண்டாம் வரதச்சனை

அல்லாவின் திருப்பெயரால்...

அன்புள்ள சஹோதர சஹோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தில் புதிய பல சீரழிவுகள் உண்டாகி உள்ளன 
அவற்றில் ஒன்று தான் வரதச்சனை என்னும் கொடிய நோய் நம்முடைய மார்க்க வேதமான திருக்குரானில் அல்லா சொல்கிறான்;



"நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய
மஹர்(திருமண கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள்
அதிலிருந்து ஏதேனும் ஒன்றை அவர்கள் உங்களுக்கு கொடுத்தால்
அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்"
அல்_குரான்(4:4)

"இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

அல்-குரான்(5:5)
>மேலும் பார்க்க(33:50, 60:10)

எனவே மேற்க்கண்ட இறைவசனங்களில் திருமணம் செய்யும் பெண்களுக்கு நாம் தான்
மஹர்(திருமணக்கொடை) அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறான்.நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களும் அப்படித்தானே திருமணம் செய்தார்கள்..மற்றவர்களுக்கும் இப்படிதானே செய்ய சொன்னார்கள்.சஹோதரர்களே!
சற்று சிந்தியுங்கள் நாம் அப்படியா செய்கிறோம்?இல்லை..

திருமணம்,வளைகாப்பு ,பிள்ளைக்கு பெயர்வைத்தல்,என்று உங்களுடையத மனைவிக்கு
நீங்களா செலவு செய்கிறீர்கள் இல்லை பெண்வீட்டாரிடம் DESENTஆக பிச்சை எடுக்கிறோம்
இவை தேவை தான நம்முடைய மனைவிக்கு நாம் தானே செலவு செய்ய வேண்டும்.

அதைவிட முதலில் அல்லாவுக்கு பயப்பட வேண்டும் ஏனெனில் அல்லாஹ் குரானில்
கணவன் தான் மனைவிக்கு மஹர் கொடுக்க வேண்டும் என கட்டளை இட்டுள்ளான்
நாமோ அதற்க்கு மாற்றமாய் செய்தல் அவனது கோபத்திற்கு உள்ளாவோம்..நரகம் தான் மறுமையில் கூலி.


>இதைவிட கொடுமை என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் வரதட்சணை என்பது
இல்லை என மார்க்க வேதமான குரானில் கூறப்பட்டுள்ளது..ஆனால் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் சிலர் இவ்வாறு செய்வதால் மாற்றுமத நண்பர்கள் நம்முடைய மார்க்கத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர்.

> மற்ற மதங்களைப்போல் மனிதநேய பண்புகளை சிதைக்கிறது என தவறாக புரிந்து
கொள்கின்றனர் இவை அனைத்திற்கும் யார் காரணம்?நீங்கள் தானே...

>சஹாதரர்களே நம்முடைய மார்க்கம் எவ்வளவு அழகானது அதனை இவ்வாறு சிதைக்காலமா?

>எனவே வரதட்சணை போன்ற குப்பைளை தூக்கி தூரப் போடுங்கள்..

>சஹோதரர்களே நான் சபதம் ஏற்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நன் இனிமேல்
வரதச்சனை வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன்...எனவே நீங்களும் சபதம் எடுங்கள்...

குறை அல்லது நிறை எதாவது சொல்லிடு போங்க பாஸ்

No comments:

Post a Comment