Sunday, June 24, 2012

திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!


திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!

quran-1
இன்றைய உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு உலக அதிசயம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர், … போன்றவைகள்தான்.  இவர்கள் அதிசயம் என்றாலே என்னவென்றே விளங்காத மக்களாகத்தான் உள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் எப்படி அதிசயமாக இருக்க முடியும். அதிசயம் என்பதற்கு நமது பகுத்தறிவுக்கு உகந்த வகையில் விளக்கம் கொடுக்க வேண்டுமாயின் எங்கே மனிதனுடைய அறிவு திகைத்துப்போய் - தோற்று விடுகின்றதோ அதுவே அதிசயம் ஆகும்.



 இன்றைக்கு இவர்கள் கூறும் சில கட்டிடங்ள் உண்மையில் அதிசயமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இன்றைக்கு நம்மிடத்திலும் போதிய பணமும், கட்டிட வல்லுனர்களும் இருந்தால் இது போன்று பல கட்டிடங்களை நம்மால் உருவாக்க இயலும்.

மனிதனுடைய அறிவு தோற்று போய் விடையளிக்க முடியாமல் திகைத்து போகக் கூடிய ஏராளமான சான்றுகளை இறைவன் இந்த பிரபஞ்சத்தில் வாரி இறைத்துள்ளான். ஆனால் பெருபான்மையான மக்கள் இவற்றை பற்றி அறவே சிந்திப்பது கிடையாது.

மேலும் அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு அதிசயம் இருக்கின்றதா என்றால், ஆம். அது இறைவேதமாகிய திருக்குர்ஆன் மட்டுமே!

அப்படி என்ன இந்த குர்ஆனில் அதிசயம் இருக்கின்றது என்றால் அவற்றில் உள்ள வசனங்களை சிந்தித்து படித்து பார்த்தால் நிச்சயமாக இது மனித சொல் அல்ல! மாறாக இது இறைச்சொல்லாகத்தான் இருக்க முடியும் என்று மனிதனுடைய அறிவு அங்கே திகைத்து போய் விடுவதை பார்க்க முடியும்.

திருக்குர்ஆனில் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சில இறைத்தூதர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடியும். பொதுவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள வரலாறுகள் அனைத்தும் கட்டுகதைகளாகவும், கற்பனையாகவும் தான் இருக்கும். அந்த வரலாறுகளை நம்புவதற்கு எந்த சான்றும் இருக்காது. ஆனால் திருக்குர்ஆனில் உள்ள வரலாறுகளை படிக்கும் போது அவற்றை நம்புவதற்கு சான்றையும் சேர்த்தே அதில் கூறியிருப்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும்.

மூஸா நபியின் வரலாறு
 
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூஸா என்ற இறை தூதர் பனு இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டார். அங்கே தன்னை இறைவன் என்று கூறி அம்மக்களை அடிமைபடுத்தி ஃபிர்அவ்ன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அங்கே மூஸா நபி ஏகத்துவ பிரச்சாரம் செய்ததால் இறுதியாக அவரை கொள்ள ஃபிர்அவ்ன் திட்டம் தீட்டினான். ஃபிர்அவ்னின் படை மூஸாவின் படையை துரத்தியது. மூஸா ஒரு கடலை அடைந்தபோது இறைவனின் அருளால் கடல் தண்ணீர் பிளந்து பாதை உருவாகியது. கடல் தண்ணீர் இருபுறமும் மலைபோல் உயர்ந்து நின்றது. மூஸா அதன் வழியாக தப்பித்து சென்றார். ஃபிர்அவ்னும் அப்பாதையில் நுழைந்தான் ஆனால் இறைவன் அவர்களை அளிக்க நாடி தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தான்.

இப்படி ஒரு வரலாறு திருக்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதை படிக்கும் போது இது ஏதோ கதை போன்று தெரியும். ஆனால் இந்த சம்பவம் உண்மைதான் என்பதற்கு திருக்குர்ஆனே நமக்கு சான்றையும் சேர்த்தே  சொல்கின்றது.
ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது அவன் நானும் முஸ்லிம் என்று சொல்கிறான். ஆனால் அவனுக்கு இறைவன் மறுப்பு தெரிவிக்கும் வசனத்தை திருக்குர்ஆன் கூறுக்கின்றது.

இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்: குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்கு பின் வருபவருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்). மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளில் அலட்சியமாகவே உள்ளனர்" (திருக்குர்ஆன் 10: 91,92).

இந்த வசனத்தில் இறைவன் ஃபிர்அவ்னின் உடலை பின் வருபருக்கு சான்றாக பாதுகாப்போம் என்று கூறுகின்றான். ஃபிர்அவ்ன் இறந்து பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுக்கப்பட்டு எகிப்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இவற்றை திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் (1400 ஆண்டுகளுக்கு முன்) கூட கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறிருந்தும் உனது உடலை பாதுகாப்போம் என்ற சொல் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது. ஃபிர்அவ்னின் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டிருந்தும் திருக்குர்ஆன் கூறியிருப்பது போன்றே ஃபிர்அவ்னின் உடல் மட்டும் இத்தனை நூற்றாண்டுகளாக பாதுகாப்பாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.



ஃபிர்அவ்னினின் உடலை பாதுகாப்போம் என்ற வசனத்தை படிக்கும் போது உண்மையில் இது அதிசயம் தான் என்பது பகுத்தறிவு உள்ள அனைவருக்கும் விளங்கும்.





இந்த அதிசயத்தை  படிக்கும் அனைவரும்  குர்ஆன் மனித சொல் அல்ல என்பதும் இறைச்சொல் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கிக்கொள்ள முடியும்.
(தொகுப்பு: பி.ஜே speech.). 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிடு போங்க பாஸ்

No comments:

Post a Comment